Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

அகத்தி பயன்கள்| Sesbania grandiflora Benefits | Agati


அகத்தி கீரை(Sesbania Grandiflora) Agathi

அகத்தி கீரை(Sesbania Grandiflora) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "அகத்தி கீரை" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? அகத்தி கீரை பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Tamil: Sevvagatti, Muni
Hindi: गाछ मूंगा Gaach-munga, Hathya, अगस्ति Agasti
Manipuri: হৌৱাঈমান Houwaiman
Marathi: शेवरी Shevari, हतगा Hatga
Gujarati: Agathio
Malayalam: Akatti
Bengali: Buko, Bak
Urdu: Agst
Telugu: Ettagise, Sukanasamu
Kannada: Agasi
Sanskrit: Varnari, Munipriya, Agasti, Drigapalaka.

அகத்தி பயன்படும் பகுதிகள் (Part Used)

இலை (Leaf)
வேர்பட்டை(Root Bark)
பூ (Flower)
பிசின் (Gum)
பழம் (Fruit)
பட்டை (Bark)

மருத்துவப்பயன்கள்

அகத்தி இலையை சமைத்து உண்பது போல இதன் பூவையும் சமைத்து உண்ணலாம். அதாவது வாய்ப்புண், வயிற்றுப்புண் தணியும்.

அகத்தி கீரை இருமருந்தை முறிப்பதுபோல மற்ற மருந்துகளின் செய்கையையும் கெடுக்குமாதலால் நோயாளிகளுக்கு மருந்தூட்டும் காலத்தில் இது நீக்கப்படுகின்றது. மற்ற காலங்களில் நாள்தோறும் அன்றி, வேண்டும்பொழுது இதை கறியாகச் சமைத்து உண்ண உடலில் எழும் பித்தத்தினைத் தணித்து உணவை செரிப்படையச் செய்யும்.

அகத்தி இலையை அரைத்து புற்கை செய்து கண்டல் காயங்களுக்கு வைத்து கட்டலாம்.